1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (09:53 IST)

15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு பலாத்காரம்! – காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

girl abuse
காரைக்குடியில் 15 வயது சிறுமிக்கு காதல் ஆசை காட்டி ஏமாற்றி 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் சமீபத்தில் கோவில் திருவிழா செல்லும்போது சூர்யா என்ற 19 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களிடையே காதலாக மாறிய நிலையில் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இரவு 8 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு சென்ற 15 வயது சிறுமி தனது காதலன் சூர்யாவை சந்திக்க சென்றுள்ளார். சிறுமியை இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற சூர்யா சிறுமியை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் தனது நண்பர்கள் சிலரையும் வர செய்து அவர்களையும் சிறுமியை வன்கொடுமை செய்ய வைத்துள்ளார்.

2 நாட்கள் கழித்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீஸார் சூர்யா மற்றும் அவரது 4 நண்பர்களையும் தேடி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K