செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (07:02 IST)

கோவையில் இன்று தடுப்பூசி முகாம்கள்: பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்!

கோவையில் இன்று தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது 
 
கோவை மாவட்டத்தில் நேற்று சென்னையை விட அதிக பாதிப்பு இருந்தது என்பதும் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 84 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்றும் முதல் டோஸ் மற்றும் ஏற்கனவே முதல் டோஸ் போட்டு 84 நாட்கள் ஆனவர்கள் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோவை மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.