வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (17:39 IST)

8 வழிச் சாலை திட்டம் ’சட்ட விரோதமானது ’: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ’’குட்டு’’

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்து வந்தது.இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ள தீர்ப்பு தமிழக அரசின் நடவடிக்கைக்கு மிகப்பெரும் தடையாக மாறியுள்ளது.
இதனை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், இன்று 8 வழி சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசின் இந்த கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கை செல்லாது எனவும் அதிரடியாக தீர்ப்பு வெளியிடப்பட்டது. 
 
8 வழிச்சாலை வழக்கில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள் ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ளது மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. 
 
இந்நிலையில் 8 வழிச்சாலை குறித்த  தமிழக அரசின் நடவடிக்கைக்கு  உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:
நில உரிமையாளர்களின் மறுவாழ்வு, மறு குடிவாழ்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் கூறவில்லை, நில ஆர்ஜித நடவடிக்கை சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கண்ணை மூடிக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தகூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
மேலும் இந்த 8 வழிச்சாலை திட்டம் பசுமை வழிச்சாலை என்றும் தெரிவித்தனர்.வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கண்ணை மூடிக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தக்கூடது என அறிவுறுத்தினர்.
 
சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. மக்கள் பணம் ரூ. 10 ஆயிரம் கோடியில் சாலை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்திய ஆதாரங்களை பார்க்கும் போது விதிகளின் படி நடைபெறவில்லை என தெரிகிறது .
 
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தவறுகள் இருந்தால்  அதை எதிர்த்து வழக்குகள் தொடரலாம், மாநில அரசு 8 வழிச் சாலைத் திட்டத்தை எப்படியாவது எப்படியாவது செயல்படுத்திவிடவேண்டிம் என அவசரம் காட்டியுள்ளது. சுற்றுச் சுழல் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.
 
இவ்வாறு 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான   வழக்கில் தீர்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.