வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (14:17 IST)

’ராகுல் காந்தியின் திட்டம்’ செயல்படுத்த முடியாது - நிதி ஆயோக் துணைத்தலைவர்

வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பல கட்சிகள் மக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராகுலின் இந்தத் திட்டத்தை செயலபடுத்தவே முடியாது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.  இதனால் பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன் நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.
 
மேலும் ஏழைக்களுக்கு ஆண்டுக்கும் ரூ.72 ஆயிரம் கொடுப்பதாக இருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். அதனால் இத்திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.