திடீரென 8 நாட்கள் முழு முடக்கம் என அறிவிப்பு: தமிழகத்தின் முக்கிய நகரில் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், கடந்த 5ஆம் தேதி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து குடியாத்தம் நகராட்சியில் வரும் 24ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் பால், மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் தவிர மற்ற எந்த கடைகளை திறக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது