வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (16:45 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து !

திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திருப்பதி கோயிலில் முன்னாள் தலைமை ஜீயர் முதற்கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி நாசிகள் தெளிகப்பட்டது. குறைவான அர்ச்சகர்களே இருப்பதால் கோயில் தரிசனத்தை ரத்து செய்யலாம் என ஒரு அர்ச்சகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான வழங்கப்பட்டு வந்த 300 டோக்கன்கள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தேவதானம் அறிவித்துள்ளது.