செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (14:07 IST)

பிறந்து 2 மாதமே ஆன குழந்தைக்கு 3 தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்!

baby
பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டதால் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் - சுகன்யா தம்பதிக்கு கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்தவுடன்  45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடாமல் இருந்ததால் 52 வது நாளில் ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் குழந்தையின் மூக்கில் வாயில் திடீரென ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து ஒரே நாளில் மூன்று தடுப்பு ஊசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்தது என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 
 
Edited by Mahendran