1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2022 (08:10 IST)

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா .. இந்தியாவில் மேலும் ஒரு டோஸ் தடுப்பூயா?

vaccine
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மேலும் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
சீனாவில் தற்போது அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவிய மூன்று நபர்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்திய மக்களின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு தடுப்பூசி உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்பதும் அதன் பின் கூடுதலாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.
 
Edited by Siva