ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: ரஜினிக்கு குவியும் ஆதரவால் அரசியல் கட்சிகள் அலறல்

Rajinikanth
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (22:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது.

இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் விரைவில் கோடிகளை தாண்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றைரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி
என 50 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள திராவிட கட்சிகள் பெருமையாக பேசிக்கொண்டு வரும் நிலையில் ஒருசில நாட்களில் கோடியை நெருங்கும் ரஜினியின் வேகத்தை பார்த்து பாராட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளுக்குள் கதிகலங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :