வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (09:43 IST)

தமிழகத்தில் 312 நீட் பயிற்சி மையங்கள் நாளை திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 312 நீட் பயிற்சி மையங்கள் நாளை திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. நீட் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பெரும் பாதிப்படைந்தனர். 
 
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நெருங்க உள்ள நிலையில், இன்னும் நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு ஆரம்பிக்கவில்லை என்பதால் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழி வகுக்கும் என்று எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்
 
இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,  நீட் தேர்வு பயிற்சிக்காக தமிழகத்தில் ஏற்கனவே 100 பயிற்சி மையங்கள் திறக்கப்பட்ட நிலையில், நாளை எஞ்சிய 312 பயிற்சி மையங்களும் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.