1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (16:23 IST)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..! கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்..!!

Death
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3-பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்றார்.பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர்.

அப்போது. முருகனின் மகள்கள் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் அவரது உறவினர் மாரீஸ்வரன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபடனர்.


இதில் மாரீஸ்வரன் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.