பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயங்க அனுமதி!
தமிழகத்தில் நாளை முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இந்த நான்கு மாவட்ட பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து முக்கிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
பெங்களூரு நகர போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என கர்நாடக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பெங்களூர் நகர இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெங்களூர் மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டு உள்ளது என்பதும் அங்கு பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது