1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (08:02 IST)

சென்னை மெரினா ஏடிஎம்மில் திருடிய பணத்தை வைத்து லூட்டி அடித்த பீகார் கொள்ளையர்கள்

சென்னை மெரினாவில் உள்ள ஏடிஎம்மில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகாரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினாவை சுற்றியுள்ள ஏடிஎம் களில் உள்ள பணம் தொடர்ந்து கொள்ளையடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பணத்தை இழந்த பொதுமக்களும் தொடர்ந்து போலீஸாரிடம் புகார் அளித்த போதிலும் போலீஸார் திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் மெரினாவை சுற்றியுள்ள ஏடிஎம்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது மெரினாவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சந்தேகிக்கும்படி இரண்டு இளைஞர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் ஏடிஎம்களில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என தெரியவந்தது. 
 
பணத்தை திருவதற்காக அவர்கள் மெஷினில் எந்த கருவியையும் பொருத்தி பின் நம்பரை திருடவில்லை, மாறாக வாடிக்கையாளர்கள் பின் நம்பர் போடுவதை மறைமுகமாக பார்த்துவிட்டு, பின் அவர்கள் சென்றவுடன், அந்த பரிமாற்றம் முடியாமல் இருக்கும்பட்சத்தில் பணம் எடுத்துள்ளனர். இப்படி யார் எல்லாம் முழுதாக பண பரிமாற்றத்தை முடிக்காமல் செல்கிறார்கள் என பார்த்து பார்த்து பணம் திருடி இருக்கிறார்கள்.
 
திருடிய பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் அந்த கொள்ளையர்கள். பீகாரிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு முறையும் விமானத்தில் வந்து கொள்ளையடித்துள்ளனர் இந்த கொள்ளையர்கள். இவர்களை கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.