ஒலிம்பிக்கில் இருந்து விலகிய ரோஜர் பெடரர்!
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்வதாக இருந்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.