புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (18:26 IST)

வீட்டில் தனியாய் இருந்த பெண்: அடித்து உல்லாசம் அனுபவித்த 17 வயது காமுகன்

புதுச்சேரில் 25 வயது பெண்ணை அடித்து அந்த பெண் மயங்கியதும் பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 
 
புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்சபிரபா. இவருக்கு 25 வயதாகிறது. தேசிய வங்கி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த இவருக்கு ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. 
 
ஆனால், கடந்த வாரம் பூட்டிய வீட்டில் கழுத்து அறுத்து இறந்திருந்தாள். முதலில் தற்கொலை என எண்ணிய போலீஸார், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதி அறிந்து, தலை மர்றும் உடம்பில் இருந்த காயங்கள் காரணமாக விசாரணையை துவங்கினர். 
 
அப்போது, சந்தேகத்திற்கு உள்ளான 17 வயது சிறுவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அச்சிறுவன்தான் இந்த கொலையை செய்தான் என உறுதியானது. 
 
அதாவது, சம்பவம் நடந்த நாளான்று சிறுவனின் புறா, அம்சபிரபா வீட்டிற்குள் பறந்து வந்ததால் அதை பிடிக்க அங்கு சென்றுள்ளான். ஆனால், அம்சபிரபா அந்த சிறுவனை திட்டியதால் அவன் ஆத்திரம் அடைந்து அம்சபிரபாவை கல்லால் அடித்துள்ளான். 
 
இதனால் அம்சபிரபா மயங்கி விழுந்ததும், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் கழுத்து அறுத்து கொலை செய்து, வீட்டை பூட்டிவிட்டும் சென்றுள்ளான். 
 
கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.