புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (11:19 IST)

16 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை: சென்னையில் நடந்த கொடூரம்

சென்னையில், 5 பேர் கொண்ட ஒரு கும்பல், 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களாகவே பெண் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை நிகழ்வுகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை புரசைவாக்கம் பகுதியில் ஒரு சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல் கூட்டாக சேர்ந்து கற்பழித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அவரது பெற்றோரிடம் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமியை, ஒரு பெண் வேலை வாங்கி தருவதாக கூறி, அழைத்துச் சென்று புரசைவாக்கத்திலுள்ள நிஷா என்பவரது வீட்டில் அடைக்கப்பட்டார்.  

அதன் பிறகு அந்த சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல், கிட்டத்தட்ட 5 நாட்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதன் பின்னர் அந்த 16 வயது சிறுமி, அந்த வீட்டிலிருந்து தப்பித்து சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். சிறுமியை 5 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போனார்கள்.

பின்பு உடனடியாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், சபீனா, நிஷா மற்றும் முபீனா ஆகிய 3 பெண்களை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் சிறுமியை கற்பழித்த அந்த 5 பேரை பற்றிய தகவலை கைப்பற்றி, தற்போது போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால்,அந்த பகுதியிலுள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.