11 கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை: கைத்தறி துறை இணை இயக்குநர் உத்தரவு..!
கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என மேற்கு மண்டல கைத்தறி துறை இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து 11 கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்
விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 11 ரகங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
✦ பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி
✦ துண்டு மற்றும் அங்கவஸ்தரம்
✦ லுங்கி
✦ போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி
✦ ஜமக்காளம்
✦ உடை துணி
✦ கம்பளி
✦ சால்வை
✦ உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க்
Edited by Mahendnra