1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:14 IST)

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கடந்த இரண்டு நாட்களாக கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டதை அடுத்து, கடலில் சிக்கி ஆறு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற போது, அவர்களுடைய படகு கவிழ்ந்ததால் தத்தளித்து வந்தனர். இதை அடுத்து, அவர்களை மீட்க சென்ற கிராம மீனவர்களின் படகும் கவிழ்ந்தது.

இதனை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக கடலில் சிக்கிக் கொண்ட ஆறு மீனவர்களை மீட்க அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறங்குதளத்தில் சிக்கிய ஆறு மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டதாகவும், அவர்களுக்கு தற்போது முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாதுகாப்பு படை ஹெலிகாப்டரை களத்தில் இறக்கி, இறங்குதளத்தில் சிக்கிய ஆறு மீனவர்களை மீட்டபிறகு, மீனவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva