புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (13:56 IST)

இரவு நேர ஊரடங்கு பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீஸார்: சென்னை மாநகர காவல்துறை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து சென்னையில் பாதுகாப்பிற்காக 10,000 போலீசார் பணி புரிவார்கள் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது
 
சென்னையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 449 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அத்தியாவசிய வேலை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. வணிக நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர் 10 மணிக்கு முன்பாகவே தங்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்துவிட வேண்டும் என்றும் அத்தியாவசிய பணி, மருத்துவ உதவி கோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் காவல்துறையினர் அனுமதிப்பார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.