1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (09:46 IST)

அச்சுறுத்தும் அசானி புயல்.. சென்னையிலிருந்து விமான சேவை நிறுத்தம்!

Flight
வங்க கடலில் உருவான அசானி புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

இந்தியாவில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் ஆந்திரா, ஒடிசா எல்லையில் கரையை கடக்க உள்ள நிலையில் ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.