இன்று கரையை கடக்கிறது அசானி புயல்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்க கடலில் உருவான அசானி புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு அசானி என பெயரிடப்பட்டது.
தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள அதி தீவிர புயலான அசானி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.