நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். மாதத்தின் மையப்பகுதியில் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
பிற்பகுதியில் சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யவும். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள்:9, 1, 6, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்:1, 5
அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை, சில்வர்கிரே
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, சனி