Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26


Abimukatheesh| Last Modified திங்கள், 1 மே 2017 (16:04 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். மனஇறுக்கம் குறையும்.

 


குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனக்கசப்புடன் இருந்த நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வாகனத் தொந்தரவு நீங்கும். பழுது குறையும். ஆனால் அடுக்கடுக்காக செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடாப் பழக்கம் விலகும். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு மாறுவது,  வாங்குவது நல்ல விதத்தில் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். புது வேலை அமையும். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் விட்டதை பிடிப்பீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தலைமைக்கு உதவுவீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்களின் புகழ்,  கௌரவம் உயரும். பிற்பகுதியில் வெற்றி பெறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 24, 23, 26, 17
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்இதில் மேலும் படிக்கவும் :