மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
கொடுக்கல்-வாங்கலில் திருப்தி ஏற்படும். பழைய வழக்குகளில் வெற்றியுண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். மாதத்தின் பிற்பகுதியில் ஒருவித பதட்டம், படபடப்பு, கோபம் வந்துச் செல்லும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சில சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர்களே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வெற்றிக்கனியை பறிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 8, 5, 6, 17, 24
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, ஆலிவ்பக்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி