செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (17:36 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.

கல்யாண விஷயங்களை நல்ல விதத்தில் பேசி முடிப்பீர்கள். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். முற்பகுதியில் வீண் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள்.

தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 10, 12, 27 
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி