Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

வெள்ளி, 30 ஜூன் 2017 (21:12 IST)

Widgets Magazine

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள்.


 

எதிலும் வெற்றி, பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால் கால் வலி வந்துப் போகும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.

அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன், வாக்குவாதம் வந்துப் போகும். உறவினர்களால் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகன விபத்து, மனைவியின் ஆரோக்ய குறைவு, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் வரும். டி. வி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதாகும். ஜாமீன், சாட்சி கையெழுத்திட வேண்டாம். 

 
அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரக்கூடும். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். தன்னடக்கத்துடன் செயல்படும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெளிர்நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து ...

Widgets Magazine Widgets Magazine