1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. July month numerology prediction

ஜூலை 2021 - 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

ஜூலை
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய எட்டாம் எண் அன்பர்களே! இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்ககூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள்.

சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம்தேவை.
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜூலை 2021 - 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...