1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. astrology-numerology prediction

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

ஆன்மிகம்
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
 
உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் எதிலும் ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். மனைவிவழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள்.
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம்  வெற்றியடைவீர்கள். புதிய பயணத்தை நோக்கி பயணிக்கும் மாதமிது.
    
அதிஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 22
அதிஷ்ட எண்கள்: 7, 9
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
About Writer
லெனின் அகத்தியநாடன்