வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா....?

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம்  உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
பார்லி: தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
 
கத்திரிக்காய்: கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
 
மீன்: மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
 
நட்ஸ்: நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
டீ: அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
முழு தானியங்கள்: முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
 
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது.  இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
 
பசலைக் கீரை: பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை  கரைக்கும் தன்மை கொண்டவை.