சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன...?

சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச்  சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு  அதிகரிக்கிறது.
 
சிறுநீரகக் கல், உருவான இடத்தில் இருக்கும் வரை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அது அங்கிருந்து நகரும்போது அல்லது  சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையும்போது அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
 
முதுகு மற்றும் பக்கவாட்டில் தாங்க முடியாத வலி. குறிப்பாக, விலா எலும்புக்குக் கீழ். கீழ் வயிற்றில் தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக  இடுப்பு நோக்கிப் பரவும்.
 
வலி விட்டு விட்டு அதிகமாக வரும். சிறுநீர் கழிக்கும்போது வலி அதிகமாக இருக்கும். பிங்க், சிவப்பு அல்லது பிரெளன் நிறத்தில் சிறுநீர் வெளிப்படும். கலங்கலாகவும் நாற்றத்துடனும் சிறுநீர் இருக்கும்.
 
குமட்டல் மற்றும் வாந்தி. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். மிகக் குறைவாகவே சிறுநீர் வெளியேறுதல். வழக்கத்தைவிட அதிகமாகச் சிறுநீர் கழித்தல், காய்ச்சல். நோய்த்தொற்றும் இருந்தால் உடல் சில்லிட்டுப்போதல். இந்த அறிகுறிகள்  தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
 
சிறுநீரகக் கற்களின் வகைகள்: கற்கள் எந்த வகை என்பதை தெரிந்துகொண்டால், அவை உருவாவதை நம்மால் தவிர்க்க முடியும்.
 
கால்சிய கற்கள், ஸ்ட்ருவைட் கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் கற்கள் ஆகியவையாகும். மிகவும் அரிதாக ஏற்படக்கூடியது. சிறுநீரகம் அதிகப்படியாக குறிப்பிட்ட வகை அமினோ அமிலத்தைப் பிரிக்கும் மரபியல் ரீதியான நோயால் தோன்றக் கூடியது. மிக அரிதாக வேறு  சிலவகைக் கற்களும் உருவாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :