செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் காய்கறிகள்...!!

கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம். இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து  கழுவவும். 
 
உருளைக் கிழங்கு: இரண்டு மூன்று உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள்  கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.
 
பூண்டு: முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 
 
கொத்தமல்லி: புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் முடியை அலசவும். 
 
கேரட்: கேரட் சிலவற்றை வேகவைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின்  முடியை அலசவும்.