தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா...?

egg
Sasikala|
காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம். கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது.
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
 
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல்  எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய  நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
 
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும்  சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.
 
முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று இருந்தால் உடல்  ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :