வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை வழங்கிடும் இளநீர் !!

இளநீரில் உள்ள தாதுஉப்புக்கள் செரிமான வியாதிகளால் உண்டாகும் நீர் இழப்பினை சரிசெய்கின்றன. மேலும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை இதில் உள்ள  பெப்டிடைட்ஸ் தடைசெய்கிறது.

இளநீரானது உடனடியாக உட்கிரக்கிக்கப்படும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே இது எளிதில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கிவிடும்.
 
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். 
 
இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. 
 
ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை   சுத்திகரிக்கும்.
 
இளநீரில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இளநீரினை அருந்தலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இளநீரில் கல்லீரலினைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கல்லீரலைப் பாதுகாக்கின்றன.
 
இளநீரானது சருமத்தை வறண்டுவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் படியவிடாமலும் பாதுகாக்கிறது.