செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதில் கிடைக்கும் கொத்தமல்லியின் மருத்துவ நன்மைகள் !!

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும்  இதில் இருக்கிறது. 

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே  அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.
   
கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
 
கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தையானது ஆரோக்கியமாக வளரும்.  குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி அடையும்.
 
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு கொத்தமல்லி மருந்தாகப் பயன்படும். நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும்  பாதிப்புகளை குணமாக்கும்.
 
பசியைத் தூண்டும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு. இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.
 
கண்பார்வை பிரகாசமாகும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு உணவில் கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது.  மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் மாலை கண்நோய் குறை நீங்கும்.
 
கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.