ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (15:25 IST)

அஜீரண கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் கொண்ட சாத்துக்குடி !!

Sathukudi
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சாத்துக்குடியில் அடங்கியுள்ளது.


அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது. சாத்துக்குடி குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, உடலை நோய்த்தொற்றுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கப்பட்டு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.