திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (13:54 IST)

செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும் இஞ்சி !!

பொதுவாக இஞ்சி வாசனைக்காகவும், காரத்திற்காக பயன்படுத்துவது என்றாலும் அதன் மருத்துவ பலன் மிக அதிகம் தான். இஞ்சியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் பருமனை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது.


“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே!”

சித்த மருத்துவத்தில் இஞ்சிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு என்பதை பல சித்தர்களின் பாடல் வழியாக அறியலாம்.

இஞ்சியின் காரத்தன்மை பித்தத்தை கண்டிக்கும் வல்லமை கொண்டது. பசியை தூண்டும், உமிழ் நீரை அதிக சுரக்க செய்வதால் செரிமானம் சிறப்பாக நடைபெற செய்கிறது.

இஞ்சி கர்ப்ப காலத்தில் காலையில் எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற காலை நோய் அறிகுறிகளைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஞ்சியில் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.

இஞ்சியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைத் தடுக்கிறது. மேலும் செல்களில் ஏற்படும் டிஎன்ஏவை சேதத்தைக் குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

சிலருக்கு இஞ்சி அதன் காரத் தன்மை காரணமாக லேசான நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில், இஞ்சி பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

இஞ்சியில் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு வலி போன்ற மூட்டு வலிகளைக் குறைக்க உதவுகிறது.