1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவாச பிரச்சனையை சீராக்கும் மருத்துவகுணம் நிறைந்த துளசி!!

சளித்தொல்லைக்கான நிவாரணத்தை தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. 

* துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
 
* ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் துளசியை சாப்பிட்டால் நுரையீரலை காப்பாற்றும். அதில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நாள்பட்ட ஆஸ்துமா  நோய் கூட கட்டுப்படுத்தும். 
 
* துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வறட்டு இருமல் சளி இருமல் இருப்பவர்கள் துளசியை மென்றாலே பலன்  காணலாம். 
 
* துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக்குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும். 
 
* சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் சுவாசப் பிரச்சனை சீராகும்.
 
* தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.