1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

வறண்ட சருமத்தை போக்க உதவும் கடலைமாவு ஃபேஸ் மாஸ்க் !!

கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும். இப்போது அந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

வறண்ட சருமத்தை போக்க கடலைமாவு ஒரு சிறந்த பொருள். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிதளவு  கிரீம் பால்.
 
கடலை மாவுடன் கிரீம் பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக கலக்கி அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் உங்கள் முகத்தை  குளிர்ந்த நீரால் நன்கு கழுவுங்கள். இந்த பேக் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
 
முகப்பரு பிரச்சினையால் பாதிக்க பட்டவர்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால் கடலை மாவில் துத்தநாகம் உள்ளது.
 
இது முகத்தில் உள்ள வீக்கமடைந்த திட்டுகளை குறைக்க உதவுகிறது. முகப்பருவை போக்க தேவையான பொருள்கள் கடலை மாவு, தேயிலை மர எண்ணெய்  மற்றும் ரோஸ் வாட்டர் ஆகும்.
 
2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலக்கி இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி வர முகப்பருக்கள் விலகி முகம் பளபளக்கும்.