திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொடுகு தொல்லை நீங்க இயற்கை முறையிலான குறிப்புகள் !!

பொடுகானது தலையில் நீண்ட காலம் நீடித்தால் முடி கொட்ட துவங்கும். ஆகையால் தலையை நன்கு பராமரித்து பொடுகை விரட்டுவது அவசியம்.

தலையில் பொடுகு வர காரணம் பல உண்டு. தலையை நன்கு துவட்டாதது, எப்போதும் எண்ணெய் பசையோடு அழுக்காக தலையை வைத்துக்கொள்வது, தலையை  வறட்சியாக வைத்துக்கொள்வது, தேவையற்ற கெமிக்கல்கள், ஷாம்பு போன்றவற்றை தலைக்கு போடுவது, பொடுகுள்ளவரின் சீப்பை நாமும் உபயோகிப்பது போன்ற  பல காரணங்களால் பொடுகு வர வாய்ப்புண்டு. 
 
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும். பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து  தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து  சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
 
வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
 
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.