புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முளைக்கட்டிய தானியங்களின் பலன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும் புரோட்டீன் நிறைந்த ஒரு இயற்கையான உணவாகும். பருப்புகள், கடலைகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைக்கட்டலாம். 

முளைக்கட்டல் மூலம் அவற்றின் கனிமப்பொருள் உள்ளிழுக்கப்பட்டு புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கின்றது. முளைக்கட்டல் முறையில் அவற்றில் இருக்கும் ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ஹைடெட் போன்ற ஆன்டி-நியூடிரியன்ட் பொருட்களை குறைக்கச் செய்கின்றது. 
 
கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளைகட்டுதல் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வெளியில் கொண்டுவரப்படுகின்றது.  பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிபெஸ் என்னும் ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச்  செய்யும். 
 
கொள்ளு, முள்ளங்கி விதை, ப்ராக்கோலி, மற்றும் சோயா போன்றவைகளை முளைக்கட்டுவது மூலம் அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்  கூட்டுப்பொருள் உருவாகும். இவற்றில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயது முதிர்ச்சியை குறைக்கச் செய்யும்.
 
முளைக்கட்டிய தானியங்கள் எளிதாக கிடைக்கக் கூடிய விலைகுறைவான பொருளாகும். பச்சை பயறு, கடலை பருப்பு, கொண்டைக்கடலை, அவரை விதை, காய்ந்த பட்டாணி போன்றவை நமது நாடு முழுவதிலும் எளிதாக கிடைக்கக் கூடிய தானியங்கள் ஆகும். 
 
பல நுற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் முளைக்கட்டிய பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திலும் முளைக்கட்டிய குதிரைகொள்ளு அதிகமான பலன்களை கொண்டுள்ளது. இதில் மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, கே மற்றும் அமினோ அமிலங்களை நிறைந்துள்ளது.