புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (14:37 IST)

தோல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த தீர்வாகும் குப்பைமேனி இலை !!

குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.


குப்பைமேனி செடி ஒன்றை வேருடன் பிடுங்கி நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு அதனுடன் ஏழு மிளகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வந்தால் இரதம் சுத்தம் ஆகி இரத்த ஓட்டமும் சீராகும்.

சிறியவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் குடல் புழுக்களுக்கு சிறந்த தீர்வு குப்பை மேனி. பயன்படுத்தும் முறை: வேருடன் குப்பைமேனி செடியை பிடுங்கி நீரினால் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறிவிடும்.

சளி உள்ளவர்கள் குப்பைமேனி இலைகளை தண்ணீரில் வேகவைத்து கசாயம் போல் குடித்து வந்தால் சளி இருமல் கட்டுப்படும்.

தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

பத்து குப்பைமேனி இலைகளை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து குடித்து வந்தால் உடல் அழகும் ஆரோக்கியமும் பெரும்.