வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (10:30 IST)

எளிதாக கிடைக்கும் கறிவேப்பிலையில் உள்ள ஏராள நன்மைகள் !!

Curry leaves
கறிவேப்பிலையில் வைட்டமின் “ஏ’, வைட்டமின் “பி’, வைட்டமின் “பி2′, வைட்டமின் “சி’, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.


ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், காலை வேளையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை பிரச்சனை தீரும்.

தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் எந்த வகையான அஜீரணம் இருந்தாலும் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறிவிடும். மேலும் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு நிறைந்த நச்சுக்கள் வெளியேறும்.

தினமும் காலை வேளையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீரடையும்.

வாயுப் பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக வாயுப்பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.

காலை வேளையில் வெறும் வயிற்றில், 20 கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரையும்.

நம்முடைய உணவில் கறிவேப்பிலையை சேர்த்தால் கண் பார்வை தெளிவு பெறும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ இருப்பதால் முடி நன்றாக வளரும். இளநரை ஏற்படாமல் தடுக்கும்.