வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (15:04 IST)

செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Red Banana
பொதுவாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், சுறுசுறுப்பு நம்மிடம் அதிகரிக்கும், சோர்வை நீக்கும்.


செவ்வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தை தடுக்கிறது. மேலும், பல் சொத்தை, பற்களில் ரத்த கசிவு, ஈறுகளில் வீக்கம் ஆகியவற்றை குணமாக்குகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பெண்களுக்கும் தேவையான சத்துக்களும் செவ்வாழைப்பழத்தில் அடங்கியுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் தினமும் இப்பழத்தை சாப்பிட்டு வருவதால், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நன்மைகளை அளிக்கிறது.

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளதால், கண்களில் ஏற்படும் கண்புரை தடுக்கிறது. மேலும் கருவிழி, விழிப்படலம் ஆகியவற்றை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மாலைக்கண் நோயில் இருந்து நம்மை பாதுக்காக்கிறது.

தினமும் காலையில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல், மூல நோய் போன்றவை குணமாக தினமும் தினமும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

செவ்வாழைப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை அதிகமாக நிறைந்துள்ளது. மனிதர்களை தொற்றும் தொற்று நோய்களை அழிக்கும் சக்தியை கொண்டது.