வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (11:50 IST)

எளிதில் கிடைக்கும் முளைக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

Mulai keerai
மூளைக்கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும். முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது.


முளைக்கீரையை நன்கு கழுவிச் வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் பின்பு கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.

முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும். 8. முளைகீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும். முளைக் கீரையானது இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் உதவுகிறது..

முளைக் கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது. முளைக் கீரையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.