டிராகன் பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் என்ன...?
டிராகன் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இதயத்திற்கு நல்லது, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து எடையை குறைக்கும்.
டிராகன் பழத்தின் பேஸ்ட்டை முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதால், வயது முதிர்ச்சியை குறைத்து, முகப்பரு மற்றும் வேர்க்குருவை குணப்படுத்தும்.
டிராகன் பழத்தில் வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது மற்றும் நோயில் இருந்து நம்மை காப்பாற்றும்.
தினசரி உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொண்டால், அது இதயத்தை ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் வைத்திருக்கும். எடை இழக்கும் பயணத்தில் இருந்தால், பழத்தில் இருக்கும் விதைகளில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான மாற்றாக அமையும்.
டிராகன் பழத்தில் இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த தேர்வு. ஏனெனில் இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது.