உடல் வெப்பத்தை தணிக்க இயற்கை முறையிலான குறிப்புகள்...!
உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்று வலி,முகத்தில் பருக்கள், போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகவும் அவசியமாகும்.
நல்லெண்ணெய்: நல்லெண்ணையை நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் எண்ணெய் ஊற வைத்த பின்னர் வெண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடலும் வெப்பத்தை குறைக்க முடியும்.
தர்ப்பூசணி: உணவு பொருட்கள் மூலமும் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும். தர்ப்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலின் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.
வெள்ளரிக்காய்: கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்க கூடிய வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் குறையும். இதில் அதிகமான நீர்சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியையும் குறைகிறது.
முலாம்பழம்: உடல் வெப்பத்தை குறைக்க மிகவும் புயன்பட கூடிய பழம் தான் முலாம் பழம். இதில் உள்ள நீர் சத்து உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க உதவும். தினமும் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதோடு குளிர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.
வெந்தயம்: வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும் உடலின் வெப்பமும் குறையும்.
முள்ளங்கி: முள்ளங்கியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதோடு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது எனவே வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் வெப்பம் குறையும்.
சீரகம்: இரவில் தூங்குவதற்கு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பம் குறையும்.
மாதுளை பழம்: மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.
இளநீர்: இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.
மோர்: தயிரை விட உணவில் மோர் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதால் உடலின் வெப்பம் குறையும்.