ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள அவகேடோ பழம் !!

அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக கொழுப்புகள், மாங்கனீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

அவகேடோ பழத்தில் அதிக அளவு பொட்டாசியம், வைட்டமின்கள்,இ இரும்புச்சத்துகக்ள், உள்ளது. இந்த வைட்டமின்களுக்கு மூட்டு வலியை நீக்கும் சக்தி உள்ளது. 
 
நம்முடைய உடலில் பொட்டசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் குறைபாட்டால் தான் அதிகமாக மூட்டுகள் இணையும் இடத்தில் வலி ஏற்படுகிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
 
உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பழம் நல்ல தீர்வை தரும். டயட்டில் இருப்பவர்கள் தினமும் இந்த பழத்தை எடுத்து கொண்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நம்முடைய உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும்.
 
அவகேடோ பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே தினமும் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
 
அவகேடோ பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்கள் உள்ளது. இவை நம் உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
அவகேடோ பழத்தில் அதிக அளவு லூடின் சத்து உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கண்களுக்கு நல்லது. கண்களில் ஏற்படும் கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.