ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஓட்ஸில் உள்ள சத்துக்கள் !!

ஓட்ஸில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் நம்முடைய உடலில் உள்ள இயக்க உறுப்பிகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது.

ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் உதவும். கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஓட்ஸுடன் வைட்டமின் சி உள்ள பழங்களை சேர்த்து கொள்வது நல்லது.
 
ஓட்ஸில் உள்ள துத்தநாகம் மற்றும் செலீனியம், உடலில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஓட்ஸ் உணவை தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
 
டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் ஓட்ஸை அதிகளவில் தங்களது உணவில் சேர்த்துக்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸ் உணவை தொடர்ந்து உண்பதால் தமனிகள், ரத்த நரம்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
 
ஓட்ஸை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த உறை கட்டியை கரைத்து இரத்த ஓட்டத்தை சீராகும்.
 
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வருவதால் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். உடல் எடை அதிகரிப்பு தடுக்கப்படும்.