1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிவப்பு கற்றாழையின் அற்புத மருத்துவ பலன்கள்....!

கற்றாழையானது வெப்பம் நிறைந்த, நீர்வளம் குறைந்த பகுதிகளில் வளர கூடியது. நம்மில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் நில பரப்பில், நம் அருகில் வளர கூடியதாகும். இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும். கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன.
இயற்கை நமக்கு அருளிய எண்ணற்ற கொடைகளில் மூலிகைகளும் ஒன்று. குறைந்த நீரில் அதிகமாக வளர கூடிய கற்றாழை. 
 
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, சிவப்புக் கற்றாழை, இரயில்  கற்றாழை என பல வகைகள் உண்டு.
 
செங்கற்றாழை பசுமை கலந்த செம்மை நிறத்தில் நல்ல சதைபற்றுடன்  இருக்கும். மடல்களில் மிகச் சிறிய வெள்ளைப் புள்ளிகளும், ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் காணப்படும். அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து, நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல  இருக்கும்.
செங்கற்றாழையை ஏழு முறை நீரில் நன்கு அலசி விட்டு, பின் அதனை திரிகடுக (சுக்கு, மிளகு, திப்பிலி)  தூளில் பிரட்டி மென்று உண்ண  வேண்டும். காலை, மாலை 48 நாள் உண்டு வந்தால் தீராத நோய் தீரும். குழந்தையின்மைக்கு இது ஒரு சிறந்த உபாயம் என்றும்  கூறப்படுகிறது.
 
செங்கற்றாழையை உட்கொள்ளும் போது நமது உடலானது பல பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும். உடலில் கஸ்தூரி மணம்  வீசும். உடலில் இருந்து வியர்வை வெளியேறாது.
 
தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும். (நரை, திரை) மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.