1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (14:39 IST)

பைக்கை கொரொனா காராக உருமாற்றிய இளைஞர் !

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த வடிமைப்பாளர் பிரமோத் முதலி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கொரோனாவைப் போல வடிவமைத்துள்ளார். இது மக்களை மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த  இளைஞர் பிரமோத் முதலி என்பவர் தனது பைக்கை கொரோனாவைப் போல் உருமாற்றி, அதன் மீது சமூக விலகலை வலியுறுத்தி வாசகங்கள், விழிப்புணர்வு வாகசங்களை எழுதி சாலையில் அதை இயக்கி வருகிறார்.